பிரட் சில்லி
தேவையான பொருட்கள்
5பிரட் துண்டுகள் -
1பெரிய வெங்காயம்
2 தக்காளி , 2 பச்சை மிளகாய் , 1ஸ்பூன்சீரகம்
1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1/2 ஸ்பூன்மஞ்சள் தூள்
1ஸ்பூன்மிளகாய் தூள் ,1ஸ்பூன்தனியா தூள்,1 ஸ்பூன்கரம் மசாலா ,
1ஸ்பூன்பட்டர்,தேவைக்கேற்பதண்ணீர்,தேவையான அளவுஎண்ணெய்,
தேவையான அளவுஉப்பு
செய்முறை
முதலில் பிரட் துண்டுகளை நான்கு தூண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்த்து பட்டர் இளகியவுடன் அதில் வெட்டிய பிரட் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்
பின் மற்றொரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம் சேர்க்க வேண்டும்.பின் அதில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா சேர்த்து ஒரு தம்ளர் தண்ணீர் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.இதனுடன் தேவைக்கேர்ப்ப உப்பு சேர்க்க வேண்டும்.மசாலா வெந்தவுடன் வதக்கிய பிரட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.இறுதியாக ஒரு கை அளவு கொத்த மல்லி இலைகளை தூவி இறக்கவும்.இப்போது சுவையான
பிரட் சில்லி தயார்.
0
Leave a Reply